உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும்

2012 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று புதன்கிழமை இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்ள ஆணையாளர் நாயகம் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக அறிந்துகொள்ள முடியும். பத்தரமுல்லை மற்றும் கொழும்பை அண்மித்த பாடசாலைகளை சேர்ந்த அதிபர்கள் பெறுபேருகளை நாளை வியாழக்கிழமை காலை பெற்றுக்கொள்ளலாம்.

தலைநகருக்கு வெளியிலுள்ள பாடசாலைகளுக்கான பெறுபேறுகளும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளும் நாளை வியாக்கிழமை தபாலிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.