உதயன், வலம்புரிக்கு எதிராக இராணுவ தளபதி வழக்கு

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தலா 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியவினால் யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இராணுவ தளபதியின் சார்பில் சட்டத்தரணி உபேந்திர குணசேகரவினால் நேற்று வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய  தெரிவித்தார்.

கடந்த ஜுலை 11ஆம் திகதி மேற்படி இரு நாளேடுகளிலும் வெளியிடப்பட்ட செய்தி தமக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதற்கு இழப்பீடாக தலா 100 மில்லியன் ரூபாவை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் கூறினார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: Editor