உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்! பத்திரிகைகளும் எரிப்பு

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

இன்று காலை உதயன் அலுவலகத்தில் இருந்து பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்ற வேளை மாலுசந்திப்பகுதியில் வைத்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் நால்வரால் இவர் அடித்து விழுத்தப்பட்டு பொல்லுகளால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

மேலும் இவரின் தலைப்பகுதியில் தாக்க முற்பட்ட வேளை அவர் கையால் தடுத்துள்ளார். எனினும் அவர்களது தாக்குதல் கைப்பகுதியில் பலமாய் விழுந்ததினால் அவரது கையும் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பின்னர் அவரை அருகில் உள்ள கானுக்குள் தூக்கி வீசியதுடன் மோட்டார் சைக்கிளுடன் பத்திரிகைகளை எரித்து விட்டு நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான பிரதீபன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இன்று காலை மற்றுமொரு உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மாலுசந்தியில் இருந்து வல்வெட்டித்துறைக்கு பத்திரிகைகளை விநியோகிப்பதற்காக சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்கள் சிலரினால் துரத்தப்பட்டுள்ளார்.ஆயினும் அவர் தன்னைப்பாதுகாத்துக் கொண்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webadmin