உதயன் செய்தியாளர் கிணற்றில் தவறி வீழ்ந்து அகாலமரணம்

உதயன் ஒன்லைன் செய்தியாளர் புவனேந்திரராசா மயூதரன் (வயது29) நேற்று அதிகாலை வீட்டுக்கிணற்றில் தவறி வீழ்ந்து அகாலமரணமானார்.இவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு நடக்கமுடியாத நிலையில் பலவீனமுற்று உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மயூதரனின் இறுதிக் கிரியைகள் இன்று தற்காலிக இல்லமான பழைய தபாற்கந்தோர் வீதி, லீலாவத்தை தெல்லிப்பளையில் நடைபெற்றது.

மயூரதன் உதயன் இணையத்தள செய்தியாளராக கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.மிகவும் சாதுவானவராகக்காணப்பட்ட இவரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பெரும்பாலான நிகழ்வுகளில் துடிப்பான செய்தியாளராக அவதானிக்க முடிந்திருந்தது.இவரின் இழப்புக்காக யாழ் இணைய ஊடகம் என்ற ரீதியில் ஈ-யாழ்ப்பாணம் இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.அதேவேளை இவரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Recommended For You

About the Author: webadmin