Ad Widget

உதயனுக்கு எஸ்மண்ட் விக்கிரமசிங்க விருது

ஊடக சுதந்திரத்துக்கான எஸ்மண்ட் விக்கிரமசிங்க விருது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு வழங்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து அதன் நிறுவுனர் பி. சரவணபவன் உதயன் பத்திரிகைக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.

ranil-saravana-bavan-uthayan

யுத்த காலத்தில் பலத்த சவால்களுக்கு மத்தியில் செயற்பட்ட உதயன் நிறுவனம் தமிழ் மக்களின் குரலை ஏனைய சமூகத்தினருக்கும் எடுத்தியம்பியது.

ஏனைய சமூகங்கள் தமிழ் சமூகத்துடன் தொடர்பு கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பல்வேறு அசெளகரியங்களுக்கு முகங்கொடுத்து அவர்களின் 7 ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டு பலர் காயங்களுக்குட்பட்ட போதும் மரண அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தொடர்ச்சியாக பத்திரிகையை நடத்திச் சென்றமைக்காக உதயன் பத்திரிகைக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அதேவேளை, ஊடக சுதந்திரத்துக்கான எஸ்மண்ட் விக்ரமசிங்க விருது விழாவில் சிறப்புரையாற்றிய சிரேஷ்ட பத்திரிகையாளர் எட்மண்ட் ரணசிங்கவிற்கும் பிரபல இந்திய ஊடகவியலாளர் என். ராமுக்கும் பிரதமர் சிறப்பு நினைவு விருதுகளை வழங்கி கெளரவித்தார்.

Related Posts