உண்ணாவிரத போராட்டத்திற்கு அனைவருக்கும் அரசியல் பேதங்கள் இன்றி அழைப்பு

tellippalaiவலிகாமம் வடக்கு பிரதேசத்தில் மீளக்குடியேற்றத்தை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வலி வடக்கு மீள்குடியேராதோர் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை உண்ணாவிரப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார்.

வலி. வடக்கு பிரதேசத்தில் உள்ள 24 கிராம அலுவலர் பிரிவுகளில் இதுவரை மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் தமது நிலங்களில் தங்களை மீள்குடியேற்றம் செய்யுமாறு இடம்பெயர்ந்தோர் மக்கள்; அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் அரசியல் பேதங்கள் இன்றி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தமிழ் கட்சிகள் தமது ஆதவரவை வழங்கியுள்ளதோடு தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளன.

இன்று காலை 8.30 மணி தொடக்கம் 4.00 மணிவரை இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.