தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் மேற்கொண்டு வருகின்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தான் அவர்களிடம் தெரிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் யாழ். தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர்.
இந்த மூவருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தான் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறினார்.
இந்த மூவரும் உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவ்வாறு நிறுத்தாவிடின் இந்த மூவரும் இனிவரும் காலங்களில் கட்சிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி