அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளிடம், அவ் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் கோரிக்கை விடுவிப்பதற்காக யாழ்.பல்கலைகழக மாணவர்களும் தமிழ் அரசியல் தலமைகளும் இன்று சனிக்கிழமை அனுராதபுரம் சிறைச்சாலைக்கு செல்லவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றத்திற்கு மீண்டும் வழக்குகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பல்கலைகழக மாணவர்களாகிய தாமும் அரசியல் தலமைகளும் தொடர்ந்தும் பலவழிகளில் போராடி அக் கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்ற உறுதிமொழியை வழங்கியே இவ் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கோரவுள்ளார்கள்.
நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் கொட்டும் மழைக்கும் மத்தியில் யாழ்.பலகலைகழக மாணவர்களுக்கும் வடக்குகிழக்கை சேர்ந்த பாராளுமன்ற மாகாணசபை உறுப்பிணர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி தீர்மானமானது எடுக்கப்பட்டுள்ளது.
இப் கலந்துரையாடலில் பங்கேற்க வடக்கு கிழக்கை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும் இதில் ஈபிஆர்எல்எவ் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் சிவசக்கதி ஆனந்தன், சிறிலங்கா சுதந்திரகட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஈழமக்கள் ஜனநாயகட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, ஆகியோருடன் வடமாகாண கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் மற்றும் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரே கலந்துகொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில் கலந்து கொண்டோர்
1. டக்ளஸ் தேவாணந்தா – யாழ் தேர்தல் மாவட்டம்
2. சிவசக்தி ஆனந்தன் – வன்னி தேர்தல் மாவட்டம்
3. அங்கஜன் இராமநாதன் – தேசியப்பட்டியல் உறுப்பினர்
கலந்துரையாடலுக்கு_வருகை_தராதோர்
1. த. சித்தார்த்தன் – யாழ் தேர்தல் மாவட்டம்
2. ஈ. சரவணபவன் – யாழ் தேர்தல் மாவட்டம்
3. ம. ஆ. சுமந்திரன் – யாழ் தேர்தல் மாவட்டம்
4. மாவைசேனாதிராஜா – யாழ் தேர்தல் மாவட்டம்
5.சிவஞானம்சிறீதரன் – யாழ் தேர்தல் மாவட்டம்
6. விஐயகலா மகேஸ்வரன்- – யாழ் தேர்தல் மாவட்டம்
7. இரா. சம்பந்தன் – திருகோணமலை மாவட்டம்
8. சார்ல்ஸ் நிர்மலநாதன் – வன்னி தேர்தல்மாவட்டம்
9. செல்வம் அடைக்கலநாதன் – வன்னி தேர்தல் மாவட்டம்
10. கவீந்திரன் கோடீசுவரன் – அம்பாறை மாவட்டம்
11.ஞானமுத்து சிறிநேசன் – மட்டக்களப்பு மாவட்டம்
12. சீனித்தம்பி யோகேஸ்வரன் – மட்டக்களப்பு மாவட்டம்
13.சதாசிவம் வியாழேந்திரன் – மட்டக்களப்பு மாவட்டம்
14. துரைரத்தினசிங்கம் – தேசியப்பட்டியல் உறுப்பினர்
15. சாந்தி சிறீஸ்கந்தராசா – தேசியப்பட்டியல் உறுப்பினர்
16.சிவமோகன் – வன்னி தேர்தல் மாவட்டம்