உணவகத்திற்கு சீல் வைப்பு

closedசுகாதாரமற்ற நீரை உணவகத்தில் பயன்படுத்திய குற்றத்திற்காக மானிப்பாய் உடுவிலில், வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு நேற்று வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி உணவகத்தில் பொதுசுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே சுகாதார பரிசோதகர்கள் இதனை கண்டறிந்துள்ளனர்.

குறிப்பிட்ட உணவகத்தின் உரிமையாளர் மீது மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

இதே வேளை உடுவில் பொதுசுகாதார வைத்தியரிகாரி பிரிவில் உள்ள சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு விசர்நாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளனர்.

உடுவில் பிரதேச பொது சுகாதார வைத்தயதிகாரி பிரிவில் ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்ட அறிவித்தலை தொடர்ந்து விசர் நாய் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது

கட்டாக்காலி நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு விசர்நாய் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor