உடுவில் மகளிர் கல்லூரி விவகாரம்: மாகாண சபையில் விவாதிக்க முடியாதாம்!!

உடுவில் மகளிர் கல்லூரி திருச் சபையின் கீழுள்ள பாடசாலை, அந்தப் பாடசாலையில் இடம்பெற்ற அதிபர் நியமனம் தொடர்பான விடயத்தை, வடமாகாண சபையில் விவாதிக்க முடியாது. அத்தகைய அதிகாரம் வடமாகாண சபைக்கு இல்லையென சில உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர்.

கேசவன் சயந்தன், ஆயூப் அஸ்மின், சந்திரலிங்கம் சுகிர்தன், இமானுவல் ஆர்னோல்ட், அரியகுட்டி பரஞ்சோதி மற்றும் கந்தையா சர்வவேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு கூறினர்.

வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற போது, எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா உடுவில் மகளிர் கல்லூரி தொடர்பில் பிரேரணை ஒன்றை மன்றில் கொண்டு வந்தார்.

அதாவது, ‘பழைய அதிபரை திடீரென நீக்கியமை தொடர்பில் மாணவிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில், சில ஆசிரியர்களால் மாணவிகள் மீது தகாத வார்த்தை பிரயோகிக்கப்பட்டுள்ளது. அத்துடன். கல்வித் தகைமைகள் இல்லாத ஆசிரியர்கள் அங்கு கல்வி கற்பிப்பதாக பெற்றோர்கள் எனக்கு முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றார்.

இதன் பிறகு சபையில் கூச்சம் குழப்பம் நிலவியது. இந்தப் பேரணையை எடுக்க வேண்டாம் என மேற்சொன்ன உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

‘அது ஒரு மிசனறி பாடசாலை. மாகாண சபை விசாரிக்க முடியாது’ என சயந்தன் கூறினார்.
நான் சொல்ல வருவதை கேளுங்கள். சொல்லி விடுகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவர் கோரினார்.

‘2009 ஆம் ஆண்டு பாடசாலைக்குள் கவச வாகனத்தில் சென்று அந்த அதிபரை மீண்டும், யார் நியமித்தீர்கள் என்று தெரியும். அது பற்றி கதைப்பீர்களாக இருந்தால் நாங்கள் குழப்புவோம்’ என சயந்தன் கூறினார்.

‘கல்லூரி விடயம் தொடர்பில் நீங்கள் எதுவும் இங்கு சொல்ல முடியாது’ என ஆர்னோல் கூறினார்.
அதன் பிறகு வழமையாக குழப்பம் விளைவிக்கும் மேற்படி உறுப்பினர்கள் கத்தினர். இதில் புதிதாக சர்வேஸ்வரனும் சேர்ந்து கத்தினார்.

‘இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு, சமரசம் செய்யப்பட்டுள்ளது. மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் இதில் தலையிட்டுள்ளார். எந்நேரமும் இந்தப் பிரச்சினை நீதிமன்றம் செல்லும். வடமாகாண சபையில் அதனை விவாதித்தால். அது குழப்புவதாக முடியும்’ என்றார்.

‘இது பெற்றோரின் முறைப்பாடு, நான் இந்தச் சபையைச் சேர்ந்தவன் ஆகையால், சபையில் தானே கையளிக்க வேண்டும்’ என்றார்.

எனினும், அதற்கு மேற்படி குழப்ப உறுப்பினர்கள் உடன்படாமையால், இந்த விடயத்தை மாகாண சபையின் முறைப்பாட்டுக் குழுவிடம் தான் கையளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor