உடுவிலில் நிர்மாணிக்கப்பட்ட வீடு திறந்துவைப்பு

new-homeயாழ். உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

சுன்னாகம் மதவடி வீதியில் அமைந்துள்ள இவ்வீடு இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 100,000 ரூபா நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டது.

வடமாகாண தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சரத் சந்திபாலா இவ்வீட்டை திறந்துவைத்தார். இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் மகேந்திர சந்திரசேனா, மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் ஆர்.பிறேமரெட்னா, யாழ். மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற சம்மேளனத் தலைவர் எஸ்.லக்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor