ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் நீக்கம்

EPDP flagஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் அச்சுவேலி இணை இணைப்பாளரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான லிங்கேஸ் என்று அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை செல்வராசா மற்றும் ஆசைப்பிள்ளை சுசீந்திரன் ஆகிய இரண்டு பிரதேச சபை உறுப்பினர்களுமே நீக்கப்பட்டுள்ளனர்.

இதனை ஈ.பி.டி.பியின யாழ் மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி மகலேந்திரன் உறுதிப்படுத்தினார். கட்சியின் ஒழுங்கு விதிகளுக்கு மீறி இந்த இரண்டு உறுப்பினர்களும் செயற்பட்டமையினால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.