ஈ.பி.டி.பியின் பெயரைப் பயன்படுத்தி களங்கம் விளைவிக்கப்படுகிறது- கமலேந்திரன் (கமல்)

kamal_epdpஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி யாழ்.குடாநாட்டில் தேவையற்ற அநாகரிகமான செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே இது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்.நகரிலுள்ள பிரபல உணவகம் ஒன்றுக்கு 57-9467 என்ற இலக்கம் உடைய வாகனத்தில் மதிய உணவு அருந்துவதற்கு வந்த இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களென நால்வர் அங்கு மதிய உணவை அருந்திவிட்டு உணவுக்குரிய பணத்தை செலுத்தாமல் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த ஹோட்டல் காசாளர் அவர்களிடம் பணத்தைக் கேட்கவே அவர்கள் தாம் ஈ.பி.டி.பி என்று அச்சுறுத்தும் பாணியில் நடந்து கொண்டுள்ளனர். இது விடயம் சம்பந்தமாக எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனவே எமது கட்சியின் பெயரைப் பயன்படுத்தும் எவராக இருந்தாலும் அதுதொடர்பாக எமது பிரதேச இணைப்பாளர்களுக்கோ அல்லது எமக்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ உடனடியாக அறியத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு கூறியுள்ளார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள்.