Ad Widget

ஈரானிய ஜனாதிபதியின் மறைவு : இன்று துக்க தினம்!!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக நாட்டில் இன்றைய தினத்தை துக்க தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி இன்று அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிகார அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் பயணித்த ஹெலிகப்டர் நேற்;றுமுன்தினம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருந்தனர்.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட குழுவினர், கிழக்கு அஜர்பைஜானில் அமைக்கப்பட்டிருந்த பாலமொன்றை திறந்து வைத்துவிட்டு, மீண்டும் டெப்ரிஸ் நகருக்கு திருப்புக்கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts