ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

அமெரிக்கக் கூட்டுபடைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

irac-ad

ஈராக்கில் அன்வர் மகாணத்தில் காயும் நகரில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் தலைவர்கள் கூட்டம் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. அப்போது அந்தக் கூட்டத்தைக் குறி வைத்து அமெரிக்கக் கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் அபுபக்கர் அல்-பாக்தாதி காயம் அடைந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அவர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது.

தற்போது அவர் இறந்து விட்டதாக புகைப்பட ஆதாரத்துடன் அல் இட்டிசாம் என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தகவலை ஐஎஸ்ஐஎஸ் இயக்கமும் உறுதிபடுத்தியுள்ளது.

அபுபக்கர் அல்-பாக்தாதி இறந்து விட்டதாக வெளியான செய்தி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.