இ.போ.ச பணிப்புறக்கணிப்பிற்கு உடனடித் தீர்வு வழங்கப்பட்டது

இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் மற்றும் பஸ் நடத்துநர்கள் தமது சம்பளத்தினை வழங்கக் கோரி மேற்கொண்ட போராட்டம் சம்பளம் வழங்கப்பட்டதினையடுத்து முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

DSC09665

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமக்கான இரண்டு மாதச் சம்பளத்தினை வழங்கக்கோரியே சாரதிகளும் நடத்துநர்களும் இன்று 12 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண முகாமையாளர் சந்தித்துக் கலந்துரையாடி, சாரதி மற்றும் நடத்துநர்களின் சம்பளங்கள் வழங்கப்பட்டதினையடுத்து பணிப்புறக்கணிப்புப் போராட்டம் 3 மணியுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.