இவ்வருட இறுதிக்குள் 27,000 வீடுகள் கட்டப்படும்: சிங்ஹா

இந்திய வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரையிலும் 1000 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. இவ்வருட இறுதிக்குள் 15 ஆயிரம் தொடக்கம் 27 ஆயிரம் வரையிலான வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்படும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்துள்ளார்.

y-k-sinha-india

தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று புதன்கிழமை (13) காலை 11 மணியளில் நடைபெற்ற காலவரையறை இல்லாத இந்திய -இலங்கை ஒத்துழைப்பு எனும் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த வைபவத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

2015 ஆம் ஆண்டளவில் 51 ஆயிரம் வீடுகளையும் நிர்மாணித்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்திய வீடமைப்பு திட்டத்தின் ஊடாக 51 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. 50 ஆயிரம் வீடுகள் வடக்கு கிழக்கிலும் 1000 வீடுகள் மழையகத்திலும் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.