இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு கனடா நாட்டு தமிழ் வர்த்தகர் கழகம் ஆர்வம்

கனடா நாட்டு தமிழ் வர்த்தகர் கழகம் வடக்கில் முதலிடுவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களில் முதலீடு செய்வதற்கான எண்ணக் கருப்பத்திரத்தை வெளிவிவகார அமைச்சில் கனடா வாழ் தமிழ் வர்த்தகர்கள் சமர்ப்பித்துள்ளதாகத் தெரியவருகிறது.

பெரும் மற்றும் சிறு கைத்தொழில் முதலீட்டு திட்டங்களை இங்குள்ளவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்வதற்கே திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் ஊடாக முதற்கட்டமாக 14 முதலீட்டாளர்கள் வெளிவிவகார அமைச்சுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்ட போதும் தற்போதே இந்தத் திட்டத்தை நகர்த்துவதற்கான எண்ணக் கருப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு முதலீட்டு சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விரைவில் அனுமதி கிடைத்ததும் யாழ்.அரச அதிபர், வடக்கு மாகாண சபை பிரதம செயலாளர், யாழ்.வர்த்தகர்கள் ஆகியோரை கனடா தமிழ் வர்த்தகர்கள் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம் என கனடா வாழ். தமிழ் வர்த்தகர் சமூகத்தினர் முன்வைத்துள்ள எண்ணக் கருப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor