புன்னாலைக்கட்டுவன், வடக்குச்சந்தியில் உள்ள தேனீர் கடையொன்றின் மீது இளைஞர் குழு ஒன்று மது போதையில் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக கடையில் பணிபுரியும் இருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மது போதையில் கடைக்குள் நுழைந்த இளைஞர் குழுவொன்று கடை உரிமையாளரிடம் உணவு தொடர்பான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவரை தாக்க முற்பட்டுள்ளனர். இதனை தடுக்க முயன்ற ஊழியர்களையும் மேற்படி குழவினர் தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலில் கடும் காயங்களுக்கு உட்பட்ட நிலையில் மேற்படி கடை ஊழியர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.