வறுத்தலைவிளான் பகுதிக்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் மூவர் மோட்டார் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று திங்கள்கிழமை நள்ளிரவு குறிப்பிட்ட இருவரையும் கைது செய்த சுன்னாகம் பொலிஸார் அவர்களைதெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட இடம் தெல்லிப்பழை பொலிஸ் பகுதி என்பதால் இருவரையும் தெல்லிப்பழை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.