அளவெட்டி கூட்டுறவுச் சங்க கடைக்கு அருகில் வியாழக்கிழமை (12) இரவு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது பின்னால் வந்த மூவர் இரும்பு குழாயால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் படுகாயங்களுக்குள்ளான இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அளவெட்டி பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பிரசன்னா (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இச்சம்பவம் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என்றும் தாக்கியவர்களை அடையாளங் கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.