இளைஞன் மீது கத்திக்குத்து

புத்தூர் வாதரவத்தைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை புளியமரத்தின் கீழ் நின்று அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞனின் முகத்தில், நபரொருவர் கத்தியால் குத்தியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதே இடத்தைச் சேர்ந்த அசோகதாசன் சதீஸ் (வயது 26) என்ற இளைஞனே முகத்தில் படுகாயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

Related Posts