இளவாலையில் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் 10 மாதக் குழந்தை உயிரிழப்பு!!

காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட 10 மாதக் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த சோகம் யாழ்ப்பாணம், இளவாலையில் நடந்துள்ளது.

இளவாலை, உயரப்புலத்தைச் சேர்ந்த தனீஸ்வரன் அக் ஷ்யன் என்ற 10 மாதக் குழந்தையே உயிரிழந்துள்ளான். குழந்தைக்கு நேற்றுமுன்தினம் காய்ச்சலுடன் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. முதலில் குழந்தைக்கு பரசிட்டமோல் வழங்கியுள்ளனர் பெற்றோர்.

ஆனால் காய்ச்சல் தொடர்ந்ததால் அவர்கள் நேற்றுக்காலை குழுந்தையை பண்டத்தரிப்பு வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். குழந்தை அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டான்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற குழந்தை நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான் என்று இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தைக்கு என்ன காய்ச்சல் ஏற்பட்டது என்பது தெரியவில்லை. குழந்தையின் உடல், உடல்கூறாய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளது.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor