இளவாலையில் கஞ்சாவுடன் ஆணும் பெண்ணும் கைது

arrest_1இளவாலை பொலிஸ் பிரிவில் மாதகல் மேற்கு பகுதியில் கஞ்சா வைத்திருந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 38 கிலோ 652 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

58 வயது ஆணும் 51 வயது பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor