இளம் பெண் தீ மூட்டி கிணற்றில் பாய்ந்து தற்கொலை: சுன்னாகத்தில் சம்பவம்

fire2சுன்னாகத்தில் இளம் பெண் ஒருவர் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கே.கே.எஸ் வீதி சுன்னாகத்தைச் சேந்த சர்வேஸ்வரன் பிரிந்தா (வயது 26) என்ற இளம் பெண்ணே இன்று (03) காலை நோயின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவரது சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவரது சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி ஆர். தனுசன் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor