இலவச புலமைச்சுடர் விநியோகம்

தரம் 5 புலமைப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி ‘அரச புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளுக்கு நிகரான பக்க வடிவமைப்பில்’ தயாரிக்கப்பட்ட புலமைச்சுடர் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.

வடமாகாண தமிழ் மாணவர்கள் சித்தியடையும் வீதத்தை அதிகரிக்கும் வகையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவனின் நிதிப் பங்களிப்பில் யாழ். றோட்டறிக் கழகத்தின் செயற்றிட்டத்தில் இலவச வெளியீடாக விநியோகிக்கப்படுகின்றன.

இவ் இலவச வினாத்தாள்களை பெற விரும்பும் பாடசாலைகள் அருகில் உள்ள உதயன் கிளை நிறுவனத்தில் அதிபரின் உறுதிப்படுத்தல் கடிதத்தை சமர்ப்பித்து தங்கள் பாடசாலைக்குரிய வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை புலமைச்சுடர், ஒளிஅரசி ஆசிரியை பீடம் அறியத்தருகின்றார்கள்.

அத்துடன் மன்னார் மாவட்ட மாணவர்கள் வவுனியா அலுவலகத்திலும், முல்லைத்தீவு மாவட்ட மாணவர்கள் கிளிநொச்சி அலுவலகத்திலும் வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விநியோகத் தொடர்புகளுக்கு 0776569617, 0774228102, வினாத்தாள் தொடர்பான சந்தேகங்கள், விளக்கமின்மைகளுக்கு 071 4449447 , 078 2825009 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு
கேட்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor