இலவச அமெரிக்க ‘கிறீன் கார்ட் விசா’ வுக்கு விண்ணப்பிக்கலாம்!

அமெரிக்க கிறீன் கார்ட் லொத்தர் எனப்படுகின்ற வருடாந்த இலவச அதிஸ்ட சீட்டிழுப்பு விசா திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பங்கள் 02.10.2012 முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது. www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக அமெரிக்க கிறின் காட் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களில் இருந்த கிட்டத்தட்ட 55000 விண்ணப்பங்கள் கணினி மூலம் தெரிவுசெய்யப்படும். இலங்கையில் இருந்து சுமார் 300 விண்ணப்பங்கள் வருடாந்தம் தெரிவுசெய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிப்பதற்கான இறுதித்திகதி 3-11-2012 ஆகும். இதற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை.