ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஜெனிவாவில் நேற்று நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 32 ஆவது கூட்டத் தொடரின் பின்னரே இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்போதே ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வருகை தருவார் என அவர் தெரிவித்தார்.
அவரின் வருகையை இலங்கை அரசாங்கம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.