இலங்கையில் கடந்த 21ம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், சிரியாவின் பகோஸில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்டாடி இதனை காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
சுமார் 5 வருடங்களின் பின்னர் அவர் தோன்றும் முதலாவது காணொளி ஒன்று நேற்று வெளியாக்கப்பட்டது.
இதில் அவர் பல்வேறு ஐ.எஸ். தாக்குதல்கள் குறித்து குறிப்பிடும் அதேநேரம் இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்தும் கூறியுள்ளார்.