இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு ஆரம்பமாகியது

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 10.30 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் ஆரம்பமாகியது.

tamil-arasu-part

தமிழரசுக் கட்சியின் கொடியை அதன் தலைவர் மாவை சேனாதிராஜா ஏற்றிவைத்தார். மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், வடமாகாண சபையின் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எஸ்.சிறீதரன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பல்வேறுபட்ட தரப்பினரும் கலந்துகொண்டனர்.