இலங்கை அரசு கொள்ளைக்கார அரசு: மாவை

mavai mp inஇலங்கை அரசைப் போல் கொள்ளைக்கார அரசு உலகத்தில் எங்கும் இருப்பதாக தெரியவில்லை என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

காணி சுவீகரிப்புக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச, உள்ளுராட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் முழுமையாக சிவில் நிர்வாகம் இல்லை என்பதை உலக நாடுகளுக்கு கூறுகின்றோம். எல்லா இடங்களிலும் இராணுவ புலனாய்வாளர்களின் தலையிடு நேரடியாக இருக்கின்றது.

வடக்கு மாகாண சபை தேர்தல் நடக்குமா என்பது கேள்விக்குறியாகவே இரக்கின்றது. அரசாங்கம் தேர்தலை நடத்துவமோ விடுவமோ என்ற போராட்டத்தில் இருக்கின்றது. அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தமிழ் மக்கள் தோற்றுப் போன சமூகம் என்று ஒதுக்கி வைத்துள்ளது.

சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் சமூகம் தோற்றுப் போன சமூகம் என்று ஆனால் எங்களுடைய மக்கள், 2009 பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தல் உள்ளுராட்சி தேர்தலிலேயோ, தங்களுக்கு கிடைக்கும் ஜனநாயகத்தினை பயன்படுத்திக் கொண்டு, ஜனாதிபதியை தோற்கடித்துள்ளார்கள். வடக்கு, கிழக்கு மாகாண தேர்தல்கள் எதிலும் அரசாங்கம் வெற்றி கொள்ளவில்லை.

அந்த வேதனையை இந்த நாட்டின் ஜனநாயக ரீதியில் ஏற்றுக் கொள்ளாவிட்டால், அந்த தோத்தல்களில் அரசாங்கம் ஜனநாயகத்திற்கு விரோதமாக அரசின் முழு வளங்களையும் பாவித்து, தன்னுடைய பலத்தினை பயன்படுத்தி மிலேச்சத்தனமாக, அவர்களின் மக்கள் மத்தியில் சிறு கூட்டமாக விளங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்.
வடக்கு கிழக்கு முழுவதிலும் இராணுவ குடியிருப்புக்களும், பௌத்த மத பரவல்களும் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன.

ஜனாதிபதி சொல்லும் பதிலை ஹத்துருசிங்க சொல்கின்றார். அதனால் இராணுவ ஆட்சி என்றே சொல்ல வேண்டும்.
காணி சுவீகரிப்புக்கு எதிராக ஜனநாயக வழியில் அறவெளி போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழ் பிரதேசங்களில் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். பிரதேச செயலர்கள் ஊடாக போராட்டத்தினை முன்னெடுக்க அந்த மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

அந்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். காணி சுவிகரிப்புக்கு எதிராக 14 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் மே 6 ஆம் திகதி ஒரு வழக்கு விசாரணைக்கு வருகின்றது. காணி அபிவிருத்தி அமைச்சர் பண்டார தென்னக் கோணிடம் தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கான அனுமதி கொடுத்தீர்களா என்று நான் கேட்டிருந்தேன். அதற்கு தான் தனியார் காணிகளை சுவீகரிப்பதற்கான அனுமதியை கொடுக்கவில்லை என்று கூறினார்.

நிலங்களை அபகரித்து இருக்கும் இராணுவங்கள் அபகரிக்கப்பட்ட காணிகளில் இருந்து வெளியேற வேண்டும். ஜ.நா தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. எந்த மண்ணில் இருந்து போர் காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டார்களோ அந்த மண்ணில் மீண்டும் அவர்கள் குடியேற்றப்பட வேண்டுமென்று. ஆனால், நில அபகரிப்புக்கள் அதிகரித்துச் செல்கின்றன.

இந்த போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டிய தேவை இருக்கின்றது. போராட்டங்களை முன்னெடுப்பதற்கு குழு ஒன்று நியமிக்கப்பட்டு அந்த குழுவின் தீர்மானத்திற்கு அமைய எதிர்காலத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் என்றார்.

இது வாழ்வுரிமை போராட்டம் சிங்கள இராணுவமே, நீ உனது காணிக்குப் போ, என்று கூறி அவர்களை வெளியேற்ற வேண்டும். அதற்கான போராட்டத்தினை முன்னெடுத்து , சிவில் சமூகம், பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் என நீங்கள் இதை நிறைவேற்ற வேண்டுமென்றும் அவர் கூறினார்.

Related Posts