இலங்கையில் மிக இளைய வயது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் மிகவும் இளைய வயது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பிறந்து 20 நாட்களேயான குழந்தை ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தொட்டலக பகுதியை சேர்ந்த குறித்த குழந்தை நேற்று சுகயீனம் காரணமான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தையின் பெற்றோருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Posts