இலங்கையில் போதைப்பொருள் பாவிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்டத்தில் புதிதாக நியமனம் பெற்ற 71 கிராம அலுவலர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

girls-dring-bear

நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய சுகாதார அமைச்சர், கிராம சேவகர்கள் போதைப் பொருள் மற்றும் மதுபான பாவனையிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

நாகரீக செயற்பாடுகள் மற்றும் நகர வாழ்க்கை முறைகளால் பல பெண்கள் தற்போது மதுபான பழக்கவழக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.