மூதூர் படுகொலை சம்பவம் மீதான விசாரணை இன்மையும், குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பும், சிறிலங்காவில் உள்ள நீதிமன்றங்களின் பக்கச்சார்பு தன்மையை பறைசாட்டுகின்ற என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இனரீதியான நீதிமன்றம் செயற்பாடுகள் காணப்படுகின்றன. எனவே சிங்களவர்கள் சிங்களவர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்ற நிலை காணப்படுகிறது. இதன்அடிப்படையிலேயே குமாரபுரம் படுகொலை வழக்கின் தீர்ப்பும் அமைந்துள்ளது.
இதன் ஊடாக போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச சட்டத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்பது உணர்த்தப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.