இலங்கையில் அடுத்த வருடம் முதல் சர்வதேச தரத்திலான கடவுச்சீட்டுக்கள்

Passport_of_Sri_Lankaஇலங்கை கடவுச்சீட்டை சர்வதேச தரத்திற்கு அமைவான புகைப்படத்துடன் அடுத்த வருடம் முதல் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் டப்ளியூ.ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

இதனடிப்படையில் அடுத்த வருடம் முதல் கடவுச்சீட்டுக்கான புகைப்படங்கள் இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படப்பிடிப்பு நிலையங்களில் மட்டுமே எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

புகைப்பட நிலையங்களை பதிவுசெய்யும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள 0115 731028 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.