இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கும் அது தொடர்பான ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கும் இந்திய அரசாங்கம் தொடர்ந்து உதவும் என யாழ் இந்திய உதவித் துணைத்தூதுவர் அ.நடராஜன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில் உள்ள பொருளாதார ரீதியான வளர்ச்சி தற்போது முன்னேற்றம் கண்டுள்ளது.
குறிப்பாக அது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளும் முன்னேடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே இரு நாடுகளுக்கிடையில் உள்ள சமத்துவம், புரிந்துணர்வு போன்ற சக நடவடிக்கைகளையும் கட்டியெழுப்ப இந்திய அரசாங்கம் உறுதுனை அளிக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட இருக்கின்ற யாழ் மத்திய கலாச்சார நிலையத்தினை ஒப்பந்தகாரர்களுக்கு கையளிக்கும் உடன்படிக்கைகு கைச்சாத்திடும் நிகழ்வு இன்று யாழ் பொது நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய துணைத்தூதரக கோணரில் யாழ் இந்திய துணைத்தூதுவர் அ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்று போதே யாழ் இந்திய துணைத்தூதுவர் அ.நடராஜன் இதனை தெரிவித்தார்.