இலங்கையர் ஐவர் தமிழகத்தில் கைது

தமிழகத்தின் தனுஷ்கோடி அருகேயுள்ள அரிச்சல்முனை பகுதியில் கரைசேர்ந்த இலங்கை தம்பதியினர் மற்றும் அவர்களது மூன்று இளவயது மகள்மார் உட்பட ஐவரை கைது செய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார் பேசாலை பகுதியிலிருந்து 25,000 இலங்கை ரூபாயை வழங்கி படகு மூலம் இவர்கள் தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை அரிச்சல்முனையருகே இறக்கிவிட்ட படகோட்டிகள் மீண்டும் மன்னாரை சென்றடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தரையிறங்கிய அத்தம்பதியினர், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தங்களுக்கான வாழ்வாதார வசதிகள் இல்லையெனவும் தங்கள் மகள்மாரை கல்வி கற்பிக்க முடியவில்லை என்றும் வாதாடியுள்ளனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு தமிழகத்துக்கு அகதியாக சென்ற இவர்கள் கடந்த 2010ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts