இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்க உலக சுகாதார அமைப்பு இணக்கம்!

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், இலங்கையின் சனத்தொகையில் 20 வீதமானவர்களுக்கு கொவிட்-19 தடுப்பு மருந்தை வழங்க உலக சுகாதார அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த கலந்துரையாடல் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில், உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இதற்குரிய விடயங்களை ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

தேவையான நிதியைப் பெறுவது, தடுப்பு மருந்து பெற வேண்டியவர்களைத் தீர்மானிப்பது உள்ளிட்ட பல விடயங்களை குறித்த குழு ஆராயவுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்று நோயாளிகளை உடனடியாக அடையாளம் காண்பதற்கான, ஒரு இலட்சம் அன்டிஜென் பரிசோதனைக் கருவித் தொகுதிகளை உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor