இலங்கைக்கான புதிய தூதுவர்கள் ஐவர் நேற்று ஜனாதிபதியிடம் நியமனக்கடிதங்கள் கையளிப்பு!

விட்சர்லாந்து, போலந்து, பங்களாதேஷ், பெல்ஜியம், கியூபா ஆகிய நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கான புதிய தூதுவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர்.

HE-New_Ambasidor-Group

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ,ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ,அமைச்சின் செயலாளர் ஷேனுகா செனவிரத்ன ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

புதிதாக நியமனம் பெற்ற தூதவர்கள்pன் பெயர் விபரம் வருமாறு-

சுவிட்சர்லாந்து – Mr. Heinz Walker-Nederkoorn
போலந்து – Mr. Tomasz Lukaszuk
பங்களாதேஷ் – Mr. Tarik Ahsan
பெல்ஜியம் – Mr. Jan Luykx
கியூபா – Mr. Florentino Batista Gonzalez