இருவேறு விபத்துகளில் நால்வர் படுகாயம்

accidentயாழ். இலுப்பையடி சந்தியில் வான் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருநெல்வேலி பாற்பண்ணையடியினைச் சேர்ந்த எஸ்.சுகந்தி (வயது 45) என்பவரே இவ்வாறு விபத்தில் காயமடைந்துள்ளார்.

பலாலி வீதி வழியாக யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வான் வீதியினைக் கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கொக்குவில் சந்தியில் மோட்டார் சைக்கிளிலும் துவிச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் மூவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவாலையினைச் சேர்ந்த 23 வயதுடைய எஸ்.நரேஸ், 25 வயதுடைய ஏ.லிப்ஸன், மற்றும் கொக்குவிலினைச் சேர்ந்த 66 வயதுடைய ரி.மகேஸ்வரன் ஆகியோர் இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor