இருவேறு மோதல் சம்பவங்களில் நால்வர் படுகாயம்

மானிப்பாய், வடலியடைப்பு பகுதியில் ஏற்பட்ட இருவேறு மோதல் சம்பவங்களில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மானிப்பாய், சுதுமலைப் பகுதியில் சனிக்கிழமை (16) இரவு இடம்பெற்ற வாள்வெட்டில் மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் உடுவில் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஜெயசீலன் (வயது 23), என்.தர்மசீலன் (வயது 19), ரா.பரமசாமி (வயது 55) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மற்றய சம்பவம் பண்டத்தரிப்பு, வடலியடைப்புப் பகுதியில் போத்தலால் குத்தப்பட்டு இருவர் படுகாயமடைந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (17) இரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த மு.நகுலேஸ்வரன் (வயது 35), என்.செந்தூரன் (வயது 27) ஆகிய இருவருமே படுகாயமடைந்தார்கள்.

உறவினர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் முற்றியதிலேயே, மேற்படி இருவரும் போத்தலால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor