இருவேறு தாக்குதல்களில் இருவர் படுகாயம்

யாழில் இருவேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை(14) இரவு இடம்பெற்ற தாக்குதல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மல்லாகம் பங்களாவடிப் பகுதியில் உடைந்த போத்தல்களால் தாக்குதலுக்குள்ளாகி, தலை மற்றும் கைகளில் படுகாயமடைந்த நிலையில் பாஸ்கரன் இளங்குமரன்; (வயது 19) என்பவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏழாலை பகுதியில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டிற்கு இலக்காகி உடுவில் வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த நாகராசா கஜன் (வயது 25) என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.