Ad Widget

இரும்பு திருடிய இராணுவத்தினர் பொலிஸாரினால் கைது : பொலிஸ் நிலையம் இராணுவத்தினரால் முற்றுகை!!!

யாழ்ப்பாணத்தில் இருந்து இயங்கும் ஊடக நிறுவனமொன்றின் விளம்பர பதாகையை விளம்பர நிறுவனமொன்று நாவற்குழிப் பிரதேசத்தில் அமைத்து இருந்தது.

விளம்பர பதாகைகளை அமைக்கும் போது அவை காற்றால் விழாமல் இருக்க பாரிய இரும்பு கேடர்கள் கொண்டே அமைக்கப்பட்டு வருகின்றன. குறித்த விளம்பர நிறுவனம் அமைத்திருந்த ஏனைய நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்துள்ளன. அந்த இரும்புகளை களவாகத் திருடி விற்கும் செயற்பாட்டில் குறித்த இராணுவத்தினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாகத் தெரிய வருகின்றது.

இன்றைய தினம் அதிகாலை 2 மணியளவில் விளம்பர பதாகைகளை வீழ்த்தி அதிலிருந்த இரும்பு கம்பிகள், குழாய்களை திருடிக் கொண்டிருந்த 7 இராணுவத்தினரை சாவகச்சேரிப் பொலிஸார் கையும் மெய்யுமாகப் பிடித்துள்ளனர்.

பொலிசாரின் இந்த துணிகரச் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினையை பெரிதுபடுத்தவேண்டாமெனவும், தாம் பாதிக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை சீரமைத்துத் தருவதாகவும் இராணுவ உயர்மட்டத்தினர் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்திடமும், விளம்பர நிறுவனத்திடமும் கடும் அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

இதேவேளை, தற்போது இராணுவத்தினர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஏராளமான இராணுவத்தினர் சூழ்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Posts