இராமநாதன் நுண்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு ஓவியக்கண்காட்சி

Artsயாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகம் மருதனார் மடத்தில் நேற்று காலை 9.45 மணியளவில் இக்கண்காட்சி ஆரம்பமாகியது.

பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் V.P சிவனாதனும், சிறப்பு விருந்தினராக திருமதி கிருபைராஜா அருட்செல்வி, தலைவர், நடனத்துறை, இராமநாதன் நுன்கலைக்கழகம், யாழ்ப்பாணம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

கலைப்பீடாதிபதி சிவநாதனும், பேராசிரியர் தேவராஜா, முகாமைத்துவ பீடம் யாழ் பல்கலைக்கழகம் ஆகியோர் இணைந்து நாடவை வெட்டி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். இக்கண்காட்சியை கான விரிவுரையாளர்கள் கலை ஆர்வலர்கள் மாணவர்கள் பொது மக்கள், வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் என பல தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இது நுண்கலைக்கழக வரலாற்றிலே மருதனார் மடத்தில் நடை பெறும் இரண்டாவது பிரமாண்டமான ஓவியக் கண்காட்சி ஆகும். 2008ம் ஆண்டும் வர்ணமொழி என்ற பாரிய ஓவிய கண்காட்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பல தடங்கல்களுக்கு மத்தியிலும் இக்கண்காட்சியை நடத்தியிருப்பது பெரு வெற்றி அளித்துள்கதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு பல நூற்றுக்கணக்கான எண்ணெய் வர்ண ஓவியங்களும், பாரிய அளவிலான சீமெந்துச் சிற்பமும், அச்சுப்பதிப்பு ஓவியங்களும், புகைப்படக் கண்காட்சியும், பழைய பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட உருக்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. பல ஓவியங்கள் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி 18, 19, 20 ஆகிய தினங்களில் நடைபெறும் என அறிவிக்கப்படுகின்றது.