இராமநாதனின் பிணை மனு ஒத்திவைப்பு

ramanathanஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான விசாரணை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு யாழ்.மேல் நீதிமன்றினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பகுதியில் கடந்த 27 ஆம் திகதி தேர்தல் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு, சாவகச்சேரி நீதிமன்றினால் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சதாசிவம் இராமநாதனின் பிணை மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி சாணக்க ரணதுங்க மற்றும் கனாதீபன் ஆகியோரினால் இம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி பிணை மனுவினை ஆராய்ந்த யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் பிணை மனு மீதான விசாரணையினை எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைதார்.