இராணுவ வீரர் – தமிழ் பெண் திருமணம்

11ஆவது சிங்க றெஜிமேட்டினை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கும் சுதுமலை வீதி தாவடியினைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவருக்கும் இடையில் நேற்று புதன்கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது.

army-tamil-women-wedding

யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தலைமையில் காங்கேசன்துறை தல் சேவன ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் இராணுவ வீரர் ரஞ்சித் சமரசிங்கவும் மணப்பெண் ரகு தர்மினியும் தம்பதிகளாக இணைந்து கொண்டனர். திருமணம் இந்து முறைப்படியும் பௌத்த முறைப்படியும் நடைபெற்றது.