இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்திய காணிகளுக்கு 400 மில்லியன் நட்டஈடு

Sri_Lanka_Army_Logoஇராணுவ முகாம்களை அமைப்பதற்காக பயன்படுத்திய காணிகளுக்காக 400 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு தனியார் காணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பயன்படுத்தப்பட்ட காணிகளுக்கு நட்ட ஈடு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்பய்பட்டுள்ளது.

சம்பூர் மற்றும் பலாலி ஆகிய பிரதேசங்களில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக பாரியளவில் தனியார் காணிகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

தேசிய பாதுகாப்புக்கு முக்கியமான காணிகள் பொதுமக்களுக்கு மீளவும் வழங்கப்பட மாட்டாது.

இராணுவத்தினர் பயன்படுத்தாத காணிகள் மீளவும் காணி உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

பலாலி இராணுவ முகாமை அண்டிய 11000 ஏக்கர் காணியை இராணுவத்தினர் பயன்படுத்தியதாகவும், இதில் 5000 ஏக்கர் காணி மீளவும் பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.