இராணுவ பஸ் மோதி விபத்து: பெண் பலி

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் இன்று வியாழக்கிழமை(25) காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாயிலிருந்து ஹபரண நோக்கிச் சென்ற இராணுவ பஸ்ஸும் திருகோணமலையிலிருந்து கந்தளாய் நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த, கந்தளாயைச் சேர்ந்த ராணி (55 வயது) என்றே பெண்ணே பலியாகியுள்ளார். முச்சக்கர வண்டியின் சாரதி படுகாமயடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் இராணுவ பஸ் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.