இராணுவ பயன்படுத்திய வீடுகளுக்கு வாடகைகள் செலுத்தப்படுகின்றது: திசாநாயக்க

Sri_Lanka_Army_Logoயாழில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த பொதுமக்களின் வீடுகளுக்கு இராணுவத்தினரால் வாடகை செலுத்தப்பட்டு வருவதுடன் இவ்வாண்டு ஜனவரி முதல் இன்று வரையும் வழங்கப்படாத வாடகைப் கட்டணங்கள விரைவில் வழங்கப்படுமென 521 ஆவது படைப்பிரிவின் கேணல் டி.டிம்.ரி.பி.திசாநாயக்க தெரிவித்தார்.

பருத்தித்துறையில் 521 ஆவது படைப்பிரிவின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் மற்றும் காணிகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலே திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்களின் காணிகள் மற்றும் வீடுகளை கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பருத்தித்துறை இராணுவத்தினர் தங்கள் வசம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

தற்போது யுத்தம் முடிவடைந்தமையால் அக்காணி வீடுகளை கையளிக்க வேண்டிய தருணம் ஏற்பட்ட நிலையிலேயே இன்று இந்தக் காணிகள் கையளிக்கப்படுகின்றது.

நீண்டகால முரண்பாடுகளின் பின்னர் நிலவும் சமாதானமும் சுபீட்சமும் இராணுவத்தினரதும் பொதுமக்களினதும் உழைப்பினால் கிடைத்துள்ளது. அந்த சமாதானத்தினையும், ஒற்றுமையையும் நிலைநிறுத்த மிகுந்த ஆர்வத்துடன் நாங்கள் இருக்கின்றோம்.

இராணுவ நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் சமாதானத்தினை நிலைநாட்டவும் இராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த வீடுகள் மற்றும் காணிகளை கையளித்து வருகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.