Ad Widget

இராணுவ ஓய்வு விடுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேற்றம்

கிளிநொச்சி – திருநகர் பகுதியில் தனியார் காணியில் செவன் வில்லா (SevenVilla) இராணுவ ஓய்வு விடுதியில் இருந்த இராணுவத்தினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

sevenvilla

2009ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியை இராணுவம் தன்னுடைய பயன்பாட்டில் வைத்திருந்தது.

எனினும் குறித்த காணி உத்தியோகபூர்வமாக காணி உரிமையாளரிடம் கையளிக்கப்பட வில்லை என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இந்த முகாமில் இருந்த இராணுவத்தினர் எவ்வித முன் அறிவிப்புமின்றி அங்கிருந்து வெளியேறி உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது

Related Posts